Featured Post

e-payroll Monthly Salary Preparation Manual in Tamil

Search This Blog

Wednesday, October 2, 2019

My Favourite Famous Personality Kannadhasan

Kannadhasan  Photo

Kannadhasan's life story

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார்.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு.
ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார்.

கிரகலட்சுமி என்ற பத்திரிகையில்நிலவொளியிலேஎன்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரைகண்ணதாசன்என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.  

கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன.
கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.

பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன்.

கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர், 15 பிள்ளைகள்.  கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை.  இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.

36 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர்.
திரைத்துறைக்கான பங்களிப்புகள்[தொகு]
திரையிசைப் பாடல்கள்[தொகு]
கதை எழுதிய திரைப்படங்கள்[தொகு]
வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
·         நாடோடி மன்னன் (1958)
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
·         மதுரை வீரன் 1956
·         நானே ராஜா 1956
·         மகாதேவி
·         இல்லற ஜோதி
இலக்கியப் படைப்புகள்[தொகு]
கவிதை நூல்கள்[தொகு]
காப்பியங்கள்[தொகு]
1.   ஆட்டனத்தி ஆதிமந்தி
3.   ஐங்குறுங்காப்பியம்
4.   கல்லக்குடி மகா காவியம்
5.   கிழவன் சேதுபதி
6.   பாண்டிமாதேவி
7.   பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
8.   மலர்கள்
9.   மாங்கனி
10. முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்[தொகு]
1.   கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
2.   கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
3.   கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
4.   கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
5.   கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
6.   கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
7.   கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
8.   கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
9.   பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்[தொகு]
1.   அம்பிகை அழகுதரிசனம்
2.   கிருஷ்ண அந்தாதி
3.   கிருஷ்ண கானம்
4.   கிருஷ்ண மணிமாலை
5.   ஸ்ரீகிருஷ்ண கவசம்
6.   ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
7.   ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
8.   தைப்பாவை
கவிதை நாடகம்[தொகு]
1.   கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு[தொகு]
1.   பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
2.   பஜகோவிந்தம்
புதினங்கள்[தொகு]
2.   அவள் ஒரு இந்துப் பெண்
3.   அரங்கமும் அந்தரங்கமும்
4.   அதைவிட ரகசியம்
5.   ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
6.   ஆயிரங்கால் மண்டபம்
7.   ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
8.   ஊமையன்கோட்டை
9.   ஒரு கவிஞனின் கதை
10. கடல் கொண்ட தென்னாடு
11. காமினி காஞ்சனா
12. சரசுவின் செளந்தர்ய லஹரி
13. சிவப்புக்கல் மூக்குத்தி
14. சிங்காரி பார்த்த சென்னை
15. சுருதி சேராத ராகங்கள்
16. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
17. தெய்வத் திருமணங்கள்
18. நடந்த கதை
19. பாரிமலைக்கொடி
20. பிருந்தாவனம்
21. மிசா
22. முப்பது நாளும் பவுர்ணமி
23. ரத்த புஷ்பங்கள்
24. விளக்கு மட்டுமா சிவப்பு
25. வேலங்குடித் திருவிழா
26. ஸ்வர்ண சரஸ்வதி
சிறுகதைகள்[தொகு]
1.   ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
2.   ஒரு நதியின் கதை
3.   கண்ணதாசன் கதைகள்
4.   காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
6.   பேனா நாட்டியம்
7.   மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
8.   செண்பகத்தம்மன் கதை
9.   செய்திக்கதைகள்
10. தர்மரின் வனவாசம்
தன்வரலாறு[தொகு]
1.   எனது வசந்த காலங்கள்
2.   வனவாசம் (பிறப்பு முதல் தி.மு..விலிருந்து பிரியும் வரை)
3.   எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
4.   மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்[தொகு]
1.   அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
2.   இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.
3.   இலக்கிய யுத்தங்கள்
4.   எண்ணங்கள் 1000
5.   கடைசிப்பக்கம்
6.   கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை
7.   கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
8.   குடும்பசுகம்
9.   சந்தித்தேன் சிந்தித்தேன்
10. சுகமான சிந்தனைகள்
11. செப்புமொழிகள்
12. ஞானமாலிகா
13. தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.
14. தென்றல் கட்டுரைகள்
15. தெய்வதரிசனம்
16. தோட்டத்து மலர்கள்
17. நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
18. நான் பார்த்த அரசியல் - முன்பாதி
19. நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
20. நான் ரசித்த வர்ணனைகள்
21. புஷ்பமாலிகா
22. போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
23. மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
24. ராகமாலிகா
25. வாழ்க்கை என்னும் சோலையிலே
சமயம்[தொகு]
2.   அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
3.   அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
4.   அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
5.   அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
6.   அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
7.   அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
8.   அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
9.   அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
10. அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்[தொகு]
1.   அனார்கலி
2.   சிவகங்கைச்சீமை
3.   ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
உரை நூல்கள்[தொகு]
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
1.   அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
2.   ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
3.   ஆண்டாள் திருப்பாவை
4.   ஞானரஸமும் காமரஸமும்
5.   சங்கர பொக்கிஷம்
6.   சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
7.   சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
8.   திருக்குறள் காமத்துப்பால்
9.   பகவத் கீதை
பேட்டிகள்[தொகு]
1.   கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
2.   சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை[தொகு]
1.   ஐயம் அகற்று
2.   கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
விருதுகள்[தொகு]
·         சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)
மேற்கோள்கள்[தொகு]
1.      திராவிடநாடு (இதழ்) நாள்:13-2-1955, பக்கம் 6
2.      திராவிடநாடு (இதழ்) 4-1-1959, பக்.16
3.      "சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009". பார்த்த நாள் 14 சூன் 2018.
6.     ↑ Jump up to:6.0 6.1 6.2 [1], மாலைமலர், மே 31, 2012
7.      கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று
வெளி இணைப்புகள்[தொகு]
·         விசாலி கண்ணதாசனுடன் ஒரு நேர்காணல் - (ஆங்கில மொழியில்)
·         பா
·         பே
·         தொ
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
·         கவிஞர்கள்


No comments:

Post a Comment

Total Pageviews